சைத்தான் படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

சைத்தான் படத்தில்  சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கும் விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான ‘நான்’, ‘சலீம்’, இந்தியா-பாகிஸ்தான்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படமும் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது.

தற்போது இவரது நடிப்பில் ‘சைத்தான்’ படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.

இதில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். மேலும் அருந்ததி நாயர், அலிஷா அப்துலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைத்தான் படம் பற்றி விஜய் ஆண்டனி கூறும்போது, ‘படத்திற்கு படம் என்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்துவதை விட, எப்படி வலுவான திரைக்கதையை கொண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்பதில் தான் நான் அதிக நாட்டம் செலுத்தி வருகிறேன். 

என்னை பொறுத்தவரை கதையை விட கதையின் கரு தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணைக்கும். அந்த வகையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த 'சைத்தான்' திரைப்படம், கண்டிப்பாக மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு அனைத்து வகையிலும் இருக்கும் என நம்புகிறேன். 

இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஒரு அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த இயக்குனராக செயல்பட்டுள்ளது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது’ என்றார்.

மேலும் வித்தியாசமான தலைப்பு அமைவது குறித்து கூறும்போது, ‘என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு செய்யவில்லை. அவை அனைத்தும் தாமாகவே அமைகிறது" என்றார்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions