அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!

Bookmark and Share

அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!

தமிழ் சினிமாவில் தலைப்பு சிக்கல் எப்போதுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாராவது ஒரு பிரபல தலைவர் பெயரை வைப்பார்கள்... உடனே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பும். பின்னர் அதற்கு முன்னும் பின்னும் ஏதாவது வார்த்தைகள் சேர்த்து வெளியிடுவார்கள், தெய்வமகன், தெய்வத் திருமகள் ஆன மாதிரி. 

இப்போது விஜய் ஆன்டனி அப்படியொரு சிக்கலான தலைப்பைத் தேர்வு செய்துள்ளார். அது அண்ணாதுரை. பேரறிஞர் என்று புகழப்படும் அண்ணாவின் முழுப் பெயர் இதுதான். ஏற்கெனவே எங்கள் அண்ணா என்ற தலைப்பு இருந்தாலும், இப்போது நேரடியாக அண்ணாதுரை பெயரையே பயன்படுத்தியுள்ளார்.

புதுமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்கத்தில விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் இது. 

தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான 'அண்ணாதுரை' யின் பெயரை விஜய் ஆன்டனி பயன்படுத்துவது என்னென்ன சர்ச்சைகளை உண்டாக்கப் போகிறதோ தெரியவில்லை. 'ஐ பிச்சர்ஸ்' சார்பில் ஆர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் படத்தைத் தயாரிக்கிறார்கள். 

படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளராகப் பணியாற்றியவர். "விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், 'ஐ பிச்சர்ஸ்' போன்ற மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன்.

இன்னும் ஒரு வாரத்தில் 'அண்ணாதுரை' படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்," என்கிறார் ஸ்ரீனுவாசன்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions