விஜய் ஆண்டனிக்கு ஜோடியான மியா ஜார்ஜ்

Bookmark and Share

விஜய் ஆண்டனிக்கு ஜோடியான மியா ஜார்ஜ்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், விஜய் ஆண்டனி அடுத்ததாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 

படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது, மியா ஜார்ஜ் இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இவர் ஏற்கெனவே ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். விஷ்ணுவுடன் ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ‘எமன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜீவா சங்கர் இந்த படத்தில் தான் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் நாயகிகளை வைத்தே மீண்டும் புதிய படத்தை இயக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions