எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிச்சைக்காரங்கதான்! - விஜய் ஆண்டனி

Bookmark and Share

எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிச்சைக்காரங்கதான்! - விஜய் ஆண்டனி

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் பிச்சைக்காரன். சொல்லாமலே சசி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தியா பாகிஸ்தான் படம் நவம்பர் மாதமே முடிந்து விட்டதால், அப்போதில் இருந்தே பிச்சைக்காரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்த விஜய் ஆண்டனி இப்போது அப்படத்தின் இறுதிகட்டத்தில் இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சைத்தான், ஹிட்லர் போன்ற படங்களிலும் நடிக்கிறார். இந்தநிலையில், பிச்சைக்காரன் படத்தின் கதை தன்னை பாதித்தது பற்றி விஜய் ஆண்டனி கூறுகையில், நான் இந்த சினிமாவில் நடிகனாவதற்கு முன்பு பல கம்பெனிகளிடம் பிச்சை கேட்பது போன்று சான்சு கேட்டிருக்கிறேன்.

அதனால் அந்த நிகழ்வுகள் என் மனதை ரொம்ப பாதித்தன. அதுமட்டுமின்றி, சாலைகளில் காரில் செல்லும்போது சிக்னல்களில் பல பிச்சைக்காரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களைப்பார்த்து பரிதாபப்பட்டிருக்கிறேன்.

இப்படி எத்தனையோ விசயங்களை சொல்லலாம். அதோடு, அன்றாட வாழ்க்கையில் எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிச்சைக்காரர்களாகத்தான் இருக்கிறோம்.

அதனால் இந்த படத்தின் கதையை டைரக்டர் சசி சொன்னபோது அதில் உள்ள உண்மை எனக்கு புரிந்தது. ஆக, இந்த பிச்சைக்காரன் படத்தின் டைட்டில் இப்போது பலருக்கு அசிங்கமாக தெரிந்தாலும், படம் திரைக்கு வரும்போது இந்த கதைக்கு இதைவிட ஒரு சிறந்த தலைப்பு வைக்கவே முடியாது என்று சொல்வார்கள் என்கிறார் விஜய் ஆண்டனி.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions