பீட்சா வியாபாரியாக நடிக்கும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

பீட்சா வியாபாரியாக நடிக்கும் விஜய் ஆண்டனி!

நான், சலீம் படங்களை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் இந்தியா - பாகிஸ்தான். அதையடுத்து சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வரும் இப்படத்துக்காக தனது கெட்டப்பையும் வழக்கத்தில் இருந்து மாற்றி நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

மேலும், இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பதை ரொம்ப சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். ஆனபோதும் தற்போது மெல்ல மெல்ல சில தகவல்கள் காத்துவாக்கில் கசியத் தொடங்கியுள்ளன.

அதில், விஜய் ஆண்டனி ஒரு பீட்சா வியாபாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பீட்சா படத்தில் விஜயசேதுபதி பீட்சா கடையில் வேலை செய்து கொண்டு, வீடுகளில் இருந்து ஆர்டர் வருவதையும் பைக்கில் கொண்டு சென்று கொடுக்கும் வேடத்தில் நடித்தார்.

அந்த படம் மெகா ஹிட்டானது.  அதனால்தானோ என்னவோ செண்டிமென்ட் கருதி இப்படியொரு வேடத்தில் விஜய் ஆண்டனியை நடிக்க வைத்திருக்கிறாராம் சசி. அதோடு, பிச்சைக்காரன் என்றால், பணம் இல்லாதவர்கள் மட்டுமே இல்லையாம்.

அதற்கு சசி குறிப்பிடும் மனிதர்களே வேறாம். ஆக, சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ என படத்துக்குப்படம் வித்தியாசமான கருத்துக்களை சொன்ன சசி, இந்த பிச்சைக்காரனில் அதிலிருந்து இன்னும் பலபடி உயர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் பிச்சைக்காரனை இயக்கி வருகிறாராம்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions