
நாக்கு முக்க பாடல் மூலம் சினிமாவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்.
ஆனால் இந்த நேரத்தில் அவருக்குள் இருந்த நடிகன் வெளியில் எகிறிக்குதிக்க, நான் என்ற படத்தில் நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டார் விஜய் ஆண்டனி. அந்த படம் மெகா ஹிட் இல்லை என்றபோதும், விஜய் ஆண்டனிக்கு ஒரு இடத்தை பிடித்துக்கொடுத்தது.
அதனால் அதன்பிறகு சலீம் படத்தில் நடித்தார். இப்போது இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்து முடித்து விட்டு படத்தை ரிலீஸ் செய்ய சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், அடுத்தடுத்து பிச்சைக்காரன், சைத்தான் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இதில் நான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரூபா மஞ்சரி நடித்தார். அதேபோல் சலீம் படத்தில் அக்ஷா ப்ரதக்ஷனி நடித்தார்.
ஆனால் இந்த இரண்டு நடிகைகளுக்குமே அதன்பிறகு தமிழில் சரியானபடி படங்கள் இல்லை. ரூபா மஞ்சரி யாமிருக்க பயமேன் என்ற படத்தோடு காணாமல் போய் விட்டார்.
அக்ஷா ப்ரதக்ஷனியை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதேபோல், தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்துள்ள சுஷ்மாராஜ்க்கும் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியும் எந்த படமும் புக்காகவில்லையாம்.
அதனால் மனசொடிந்துபோன நடிகை ஐதராபாத்துக்கு ரிட்டனாகி விட்டார். விளைவு, தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படங்களில் நடிக்க வளர்ந்து வரும் ஹீரோயினிகள் அச்சமடைந்துள்ளனர்.
அதனால் அவரது தரப்பில் இருந்து யாராவது அழைப்பு விடுத்தால் பல படங்கள் கைவசம் இருப்பதாக சொல்லி, எஸ்கேப்பாகி வருகிறார்கள்.
Post your comment