இப்ப விஜய் ஆண்டனி, அடுத்து விஜய்யுடன் நடிப்பேன்!- சுஷ்மா ராஜ்

Bookmark and Share

இப்ப விஜய் ஆண்டனி, அடுத்து விஜய்யுடன் நடிப்பேன்!- சுஷ்மா ராஜ்

கன்னடத்தில் மாயா, ஜோரு போன்ற படங்களில் நடித்த சுஷ்மா ராஜ், தற்போது தமிழில் நடித்திருக்கும் படம் இந்தியா பாகிஸ்தான். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக்கும் சுஷ்மா, தாய்மொழியான கன்னடத்தில் நடித்ததை விடவும் இந்த படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

முக்கியமாக, விஜய் ஆண்டனியுடன் அவருக்கான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறதாம். எதிரும் புதிருமான காட்சிகள், ரொமான்டிக் காட்சிகள் என இரண்டுவிதமான பர்பாமென்ஸை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறாராம் சுஷ்மா.

அந்த அந்த படம் திரைக்கு வந்தால் அடுத்தடுத்து புதிய படங்கள் கமிட்டாகும் என்று காத்திருக்கிறார் சுஷ்மா. மேலும், கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலேயே திரைக்கு வர வேண்டிய அப்படம், பிப்ரவரி 5-ல் வெளியாக இருப்பதாக இருந்தது.

ஆனால், அந்த நாளில், அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியாகி விட்டதால், தியேட்டர் பிரச்சினை காரணமாக பின்வாங்கி விட்டது இந்தியா- பாகிஸ்தான். இருப்பினும் விரைவில் படத்தை வெளியிடும் முயற்சி நடக்கிறது.

அதனால் தற்போது பெங்களூர் சென்று விட்ட சுஷ்மாராஜ், அப்படம் ரிலீசானதும் சென்னை வந்து புதிய படங்களுக்கான அதிரடி வேட்டையில் இறங்கப்போகிறாராம். மேலும், தற்போது விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ள அவருக்கு விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையும் உள்ளதாம்.  அதனால் அதற்கான முயற்சியையும் முடுக்கி விடப்போகிறாராம் சுஷ்மா. 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions