'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி

Bookmark and Share

'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம் `டிராபிக் ராமசாமி'. இதில் கதையின் நாயகனாக அதாவது டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷும், கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்குகிறார். ஈரோடு மோகன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு  முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சுக்ரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions