விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்

Bookmark and Share

விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லி இயக்கிய இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions