விஜய் வழியில் செல்லும் ஆர்யா!

Bookmark and Share

விஜய் வழியில் செல்லும் ஆர்யா!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கத்தியில் விவசாய நிலத்தை கைப்பற்ற நினைக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக விஜய் போராடுவது போல் இப்படத்தில் காடுகளை அழிக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடுகிறாராம் ஆர்யா.

இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து செல்கின்றனர். அங்கு தொடர்ச்சியாக 20 நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions