சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்-அட்லி?

Bookmark and Share

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்-அட்லி?

விஜய்-அட்லி இணைந்து ‘தெறி’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தனர். இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும், திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் அடிபடுவது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய்-அட்லி மீண்டும் இணைவதால் இப்படம் ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்ற ஒரு கேள்வியும் எழும்பியுள்ளது. ‘தெறி’ படம் வெளிவருவதற்கு முன்பே, ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு ரசிகர்கள் அந்த படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொறுத்து முடிவு செய்யப்படும் என அட்லி தெரிவித்திருந்தார். 

தற்போது ரசிகர்கள் ‘தெறி’ படத்திற்கு பலத்த வரவேற்பு கொடுத்துள்ளதால், இவர்கள் இணைந்தால் ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இருக்கும் என்றும் ஒருசிலர் பேசி வருகின்றனர். 


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions