தெறி படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்குக் கிடைத்த வாய்ப்பு

Bookmark and Share

தெறி படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்குக் கிடைத்த வாய்ப்பு

 மலையாளத்தில் நிவின்பாலி, இஷா தல்வார் நடிப்பில் வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட “தட்டத்தின் மறையத்து” படம் தமிழில் ரிமேக் செய்யப்பட்டுவருகிறது. 

தமிழில் “ மீண்டும் ஒரு காதல் கதை” என்ற பெயரில் ரீமேக்காகி வரும் இத்திரைப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிவருகிறார். தமிழிலும் இஷா தல்வார் தான் நாயகியாக நடிக்க, அறிமுக நாயகனான வால்டர் பிலிப்ஸ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

மலையாளத்தில், “இந்துவான நிவின்பாலி, முஸ்லிம் பெண்ணான இஷா தல்வாரை காதலிப்பதும், மதங்களின் இடைவெளியில் சிக்கித் தவிக்கும் இருவரின் மென்மையான காதலும், காதல் சார்ந்த காட்சிகளுமே தட்டத்தின் மறையத்து படத்தின் திரைக்கதை. இக்கதையே தமிழில் அப்படியே ரீமேக்காகி வருகிறது. 

விஜய்யின் தெறி  படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 51வது படம் இது. தவிர  தெறி படத்தில் விஜய்க்கு மாஸ் பாடலெழுதிய அருண்காமராஜ் வரிகளில் “மைபோட்டு மைபோட்டு” என்ற பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

இப்பாடல் திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் தெரிவித்தார். மேலும்  "ஆடுகளம்" படத்தின்  'ஒத்த சொல்லால' பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார்.

இது அவரது முதல் மெலோடிப் பாடல். இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். அவர் பேசும்போது; படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப்பள்ளியில் படித்து வரும்போதிலிருந்தே தனக்கு தெரியும் என்றும், கேரளாவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருப்பதாகவும் கூறினார்.


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions