விஜய் படத்துக்கு டைட்டீல் ஆலோசிக்கும் அட்லி!

Bookmark and Share

விஜய் படத்துக்கு டைட்டீல் ஆலோசிக்கும் அட்லி!

சமீபகாலமாக படங்களுக்கு கதை ரெடி பண்ணுவதை விட டைட்டீல் வைப்பதற்குதான் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்துக்கு கிட்டத்தட்ட 250 டைட்டீல்களை யோசித்த பிறகுதான் இந்த டைட்டீலை முடிவு செய்தேன் என்றார் சுசீந்திரன்.

அதுவும் ரஜினி நடித்த படத்தின் தலைப்பு அது. அதேபோல், அஜீத்தின் ஆரம்பம் படம் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடிந்த பிறகும்கூட அப்படத்திற்கான தலைப்பை முடிவு செய்யவில்லை விஷ்ணுவர்தன்.

எந்த டைட்டீலை சொன்னாலும் அஜீத்துக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கடைசியில் பேச்சுவாக்கில் ஆரம்பம் என்று வைக்கலாமா? என்று கேட்க, சூப்பர், இதுதான் கதைக்கேற்ற டைட்டீல் என்று ஓகே சொன்னாராம் அஜீத்.

ஆக, இப்போதெல்லாம் டைட்டீல்தான் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தநிலையில், புலியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ராஜா ராணி டைரக்டர் அட்லி ஏற்கனவே கதையை ரெடி பண்ணிவிட்டு விஜய்யின் வருகைக்காக பல மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார்.  

இந்த வேளையில், அவரும் டைட்டில் ஆலோசனையில் இறங்கியிருக்கிறார். அதோடு தான் யோசிக்கும் டைட்டீல்களை அவ்வப்போது விஜய்யை சந்திக்கும்போதெல்லாம் அவரது கவனத்துக்கும் கொண்டு சென்று வருகிறாராம். ஆனபோதும், இன்னும் விஜய்யின் மனங்கவர்ந்த தலைப்பு செட்டாகவில்லையாம்.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions