அறிமுக பாடலுடன் தொடங்கிய விஜய்-அட்லி படம்

Bookmark and Share

அறிமுக பாடலுடன் தொடங்கிய விஜய்-அட்லி படம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 59’-வது படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 1-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் அறிமுக பாடலுடன் தொடங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்திற்காக விஜய் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனவே, அடுத்த பொங்கலுக்குத்தான் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் ஆடியோவை வெளியிட்டு, அதைத் தொடர்ந்து படத்தை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions