'விஜய் 61' கூட்டணி உறுதியானது!

Bookmark and Share

'விஜய் 61' கூட்டணி உறுதியானது!

தெறி படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கு அடுத்து இவர் நடிக்கபோகும் படம் குறித்த பேச்சுவார்த்தையும் தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தை சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ‘இளைய திலகம்’ பிரபு தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் 60 படப்பிடிப்பில் ‘இளைய திலகம்’ பிரபு அவர்கள் விஜய்யை சந்தித்து பேசியிருப்பது இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. மேலும் அட்லி இப்படத்தை இயக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions