விஜய்-அட்லி இணையும் படத்தில் புதிய மாற்றம்

Bookmark and Share

விஜய்-அட்லி இணையும் படத்தில் புதிய மாற்றம்

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவரது 59-வது படத்தை அட்லி இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது, இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்துள்ளனர்.

அதாவது, முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் சுமார் ஒரு மாத காலம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக இப்படத்தின் போட்டோ ஷுட் பணிகளை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போட்டோ ஷுட் நடத்துவதற்காக சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம் முழுவதும் அங்கு போட்டோ ஷுட் நடக்கும் என தெரிகிறது. அதன்பிறகே, படக்குழுவினர் சீனாவில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுதான் தயாரிக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions