கானா பாடகராக உருவெடுக்கும் விஜய்!

Bookmark and Share

கானா பாடகராக உருவெடுக்கும் விஜய்!

வெயில் படத்தில் இசையமைப்பாளரானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அந்த படத்தில் உருகுதே என்றொரு மெலோடி பாடலை கொடுத்து ஒரு நல்ல முத்திரையை பதித்துக்கொண்டவர், பின்னர் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்து ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.

அந்த வகையில், விஜய்யின் தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், அந்த படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்றொரு பாடலை விஜய்யை பின்னணி பாட வைத்தார். அந்த பாடலும் சூப்பர் ஹிட்டானது.

அதனால் தற்போது விஜய்யின் 59-வது படத்துக்கும் இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், இந்த படத்துக்கு அதிக ஈடுபாடு காட்டி இசையமைத்து வருகிறார். காரணம், இது அவரது 50வது படமாகும்.

அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் மெகா ஹிட் பண்ணி விட வேண்டும் என்று ஏராளமான டியூன்களை போட்டுத்தள்ளி வரும் அவர், இந்த புதிய படத்தில் விஜய்யை ஒரு ஓப்பனிங் பாடல் பாட வைக்கிறாராம்.

அந்த பாடல் சமீபகாலமாக ஹிட்டாகி வரும் கானா பாடல்களைப்போன்று அதிரடி டியூனில் தயாராக உள்ளதாம். ஆக, அட்லி இயக்கும் படம் மூலம் கானா பாடகராகவும் உருவெடுக்கிறார் விஜய். 


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions