விஜய்யின் அடுத்த படத்துக்கான பணிகள் தொடங்கியது

Bookmark and Share

விஜய்யின் அடுத்த படத்துக்கான பணிகள் தொடங்கியது

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்துவிட்டதால், தற்போது கோடை விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார் விஜய்.

இப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். எனவே, விஜய் லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் இப்படத்தின் பணிகள் தொடங்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், அட்லி படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தின் போட்டோ ஷுட்டை நடத்துவதற்காக சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

தற்போது ஆதித்யராம் ஸ்டுடியோவில் ‘புலி’ படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் அமைந்துள்ளன. இந்த அரங்குகளை இடித்துவிட்டு, அட்லி படத்திற்கான அரங்குகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விஜய், அநேகமாக ஜூலை 26-ந் தேதி சென்னை திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது. மூன்று நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு ஜூலை 29-ந் தேதி முதல் இந்த படத்தில் இணைவார் என்று பேச்சு அடிபடுகிறது.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions