மீண்டும் இணையும் விஜய் - அட்லி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

மீண்டும் இணையும் விஜய் - அட்லி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மீண்டும் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலோ, இயக்குனர் தரப்பிலோ இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்த அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் படம் குறித்த வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இப்படத்திற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதையாசிரியராக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் அதுகுறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது.விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதனையடுத்து, இப்படத்தின் பணிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஜய்யின் 62வது படம் இந்த வெற்றி இயக்குனருடனா- ரசிகர்கள் உற்சாகம்
விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?
விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?
விஜய் -அட்லீ அமர்க்கள ஓப்பனிங் எப்போ , எங்கே தெரியுமா?
விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்
விஜய் – அட்லிக்காக மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
விஜய்க்கான ஹீரோயினை அங்கிருந்து தேடும் அட்லி!
ஜி.வி.பிரகாஷை கழட்டிவிட்ட விஜய், அட்லி – விவரம் உள்ளே!
விஜய் – அட்லி இணையும் புதிய படமும் ரஜினியின் சூப்பர்ஹிட் பட ரீமேக்கா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions