அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

Bookmark and Share

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

விஜய் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ‘தெறி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது.

இதில் விஜய், இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், நள்ளிரவு இப்படத்தில் இடம் பெறும் ‘ஜித்து ஜில்லாடி...’ என்னும் பாடலின் வரிகள் வீடியோவை இணைய தளத்தில் விஜய் வெளியிட்டார்.

இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இடம் பெறும் மற்ற பாடல்களான ‘என் ஜீவன்...’, ‘ஈனாமீனாடீகா...’ விஜய் பாடிய ‘செல்லாகுட்டி...’, ‘ராங்கு...’ ஆகிய பாடல்களின் வரிகள் வீடியோவை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார் விஜய். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இணைய தளத்தில் இந்த பாடல்களை கேட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிட இருக்கின்றனர். 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கலைப்புலி தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions