செட்களில் படமாகும் விஜய் படங்கள்

Bookmark and Share

செட்களில் படமாகும் விஜய் படங்கள்

விஜய் நடிக்கும் படம் என்றாலே செட்டில்தான் எடுத்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. கத்தி படத்துக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் செட் போடப்பட்டது. ஜில்லா படத்துக்கு சென்னையில் உள்ள சாலிகிராமம் பகுதியில் வேலாயுதம் காலனியில் பங்களா செட் போட்டனர். புலி படத்துக்கு சென்னை ஈசிஆரில் உள்ள உத்தண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்டுடியோவில் செட் போட்டனர். புலி படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். 

இந்த படத்திற்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் செலவில் பிரம்மண்ட செட் அமைத்து வருகிறார்கள்.  இந்த செட்டின் வேலைகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடுமாம்.  செட் வேலைகள் முடிவடைந்த பிறகு, அட்லி, விஜய் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. 

விஜய் நடிக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு  முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  நடிப்பு மற்றும் டப்பிங்கை முடித்துக்கொடுத்துவிட்டு லண்டன் சென்ற விஜய், தற்போது லண்டனில் இருக்கிறார். ஓரிரு நாட்களில் விஜய் விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார். 

சென்னை திரும்பியதும் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் விஜய். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் 50-ஆவது படம் இது.  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions