தெறி முதல் வார வசூல் விவரம்

Bookmark and Share

தெறி முதல் வார வசூல் விவரம்

விஜய் நடிப்பில் கடந்த வாரம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் படம் ‘தெறி’. இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன. படம் வெளிவந்த முதல் 4 நாட்களிலேயே ரூ.35 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இப்படம் ரூ.46 கோடி வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் படங்களிலேயே ‘தெறி’ படம் தான் முதல் வாரத்தில் இவ்வளவு தொகையை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர் ஏரியாக்களில் இப்படம் திரையிடப்படாவிட்டாலும்,

இப்படத்தின் வசூலில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வரும் வாரங்களில் படம் இன்னும் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என கூறப்படுகிறது. 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!
10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions