பரபரப்பான ஆலோசனையில் விஜய் 59 ன் பட தலைப்பு..!

Bookmark and Share

பரபரப்பான ஆலோசனையில் விஜய் 59 ன் பட தலைப்பு..!

அஜித், விஜய் போன்ற எந்த நடிகர்களின் படம் வந்தாலும் இணையதள வாசிகளுக்கு ஒரே குஜால்தான். எங்க பார்த்தாலும் நடிகர்களின் புராணமாகதான் இருக்கும்.

அதுமாதிரி தற்போது அஜித் ரசிகர்களுக்கு அஜித் பற்றி புராணம் பாட வேதாளம் படம் இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு விஜய் -59 இருக்கு. வேதாளம் படம் எப்படியோ ஒரு வழிய முடுஞ்சு போச்சு. அடுத்து இணையதள வாசிகளுக்கு விஜய் 59 பற்றிய எதிர்பார்ப்புதா.

விஜய் 59 ல இப்போ என்ன பிரச்சனைன்னு கேட்ட பட தலைப்புதாங்க. விஜய் நடிக்கும் அட்லீ படத்திற்கு என்ன தலைப்பு? தற்போது பர பரப்பான டிஸ்கஷன் இது குறித்துதான்…. முதலில் மூன்று முகம் என்று வைக்க நினைத்தார்கள். அது சத்யா மூவிஸ் படம் என்பதால் ஸாரி… என்று கூறிவிட்டது அந்த நிறுவனம்.

அதே படத்தை அதே தலைப்போடு ரீமேக் செய்யும் எண்ணம் இருக்கிறதாம் அவர்களுக்கு. அதனால் வந்த ஸாரிதான் இது.கடைசியாக ‘காக்கி’ என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்குள் விஷயம் வெளியில் பரவ, காக்கி… காக்கி… என்று கண்ணில் படுகிற கலரையெல்லாம் காக்கி என்றே கொண்டாடியது விஜய் ரசிகர்களின் மனசு.

இந்த தலைப்பு விஜய்க்கும் ரொம்ப பிடித்துப் போனதுதான் விசேஷம். இந்த நிலையில் எப்படியாவது காக்கியை கைப்பற்றிவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பெயர் லிஸ்ட்டுகளை பார்த்தால், அது வேறொரு டைரக்டரின் வசம் இருக்கிறது.

அந்த டைரக்டர் ‘வாய்மை’ என்ற படத்தை இயக்கி வரும் செந்தில்குமார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் கதையை மையமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘வாய்மை’. இதில் முக்கிய ரோலில் நடிக்கிறார் கவுண்டமணி.

தனது முதல் படத்தையே செம சிக்கலான ஒரு புள்ளியில் ஆரம்பித்திருக்கும் செந்தில், பிரச்சனையை விரும்புகிறவர் போலதான் தெரிகிறார். “காக்கியை கொடுங்க தம்பி” என்றால், “இந்தாங்கண்ணே” என்று கொடுத்துவிடவா போகிறார்?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions