அட்லீ - விஜய் படத்துக்கு “காக்கி” கிடைக்குமா?

Bookmark and Share

அட்லீ - விஜய் படத்துக்கு “காக்கி” கிடைக்குமா?

அட்லீ இயக்கத்தில் விஜய்-59 படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில் மூன்று முகம் என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டது. பின்னர் காக்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் அடிபட்டு வருகிறது. 

காக்கி என்ற தலைப்பு ஏற்கனவே சரத்குமார் ஹீரோவாக நடிக்க, நமீதா  நாயகி நடிக்க, வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டில் தயாரானது. காக்கி படத்துக்காக மொட்டைப் போட்டார் சரத்குமார்.  இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து,  பிறகு ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் கிடந்து பின்னர் ட்ராப்பானது.

ஒரு படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு என்பதால் விஜய் படத்துக்கு காக்கி என்ற டைட்டில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் காக்கி படத்தின் இயக்குநர் வின்சென்ட் செல்வா தன்னுடைய தலைப்பை விட்டுக்கொடுப்பாரா என்பதும் சந்தேகம்தான். 

வின்சென்ட் செல்வா விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர். இரண்டு வெற்றிப்படங்கள் கொடுத்தும் கூட  என்ன காரணத்தினாலோ அவரை விஜய் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். எனவே கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகி சிரமப்பட்டு வருகிறார் வின்சென்ட் செல்வா.

எனவே வின்சென்ட் செல்வா நிச்சயமாக விஜய் படத்துக்கு தன் தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions