ஜூலை 20-ல் துவங்குகிறது விஜய்-அட்லி படம்!

Bookmark and Share

ஜூலை 20-ல் துவங்குகிறது விஜய்-அட்லி படம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவியாளராக இருந்தவர் அட்லி. அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஆர்யா-நயன்தாரா நடித்த ராஜா ராணி என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதனால் அடுத்த படத்தை ஒரு மெகா ஹீரோவை வைத்துதான் இயக்குவேன் என்று தீர்க்கமான முடிவில் இருந்த அட்லி, பின்னர் சில ஹீரோக்களிடம் கதை சொன்னார்.

அவர்களில் விஜய், அவருக்கு கால்சீட் கொடுத்தார். அதுவும், தலைவா படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே கதை சொல்லி ஓகே வாங்கினார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி, சிம்புதேவனின் புலி ஆகிய படங்களை முடித்து விட்டுதான் கால்சீட் தருவேன் என்று சொன்னார்.

அதற்கு, நீங்கள் எப்போது கால்சீட் கொடுத்தாலும் அதுவரை நான் காத்திருக்கிறேன் என்று சொன்ன அட்லி, அந்த கேப்பில் தான் காதலித்து வந்த நடிகை ப்ரியாவையும் திருமணம் செய்து கொண்டார்.

இப்போது விஜய் புலி படத்தில் நடித்து முடித்து விட்டதால் தனது பட வேலைகளில் மும்முரமாகி விட்டார் அட்லி. மேலும், இந்த படத்தில் ஏற்கனவே பல படங்களில் நடித்த நடிகர் நடிகைகளை புக் பண்ணினாலும் அவர்களை ஆடிசன் வைத்தே புக் பண்ணி வருகிறார்.

அந்த வகையில், ஒரு காட்சியில் நடிக்க வேண்டிய டயலாக்குகளை சொல்லி நடிக்க வைத்து செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கும் அட்லி, பிரபலமான நடிகர்கள் என்பதைவிட தான் கேட்கும் 50 நாள், 60 நாள் கால்சீட்டை முழுசாக கொடுப்பவர்களுக்கே முதலிடம் கொடுத்து டிக் அடித்து வருகிறார்.

மேலும், தற்போது கிடைத்த தகவல்படி, வருகிற ஜூலை 20-ந்தேதி முதல் விஜய்-அட்லி இணையும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குவதாக தெரிகிறது.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions