அட்லீக்கு விஜய் போட்ட கண்டீஷன்!

Bookmark and Share

அட்லீக்கு விஜய் போட்ட கண்டீஷன்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் ஃபர்ட் லுக் மற்றும் போஸ்டரகள் வெளியாகி ரசிகர்களுடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து அட்லீ சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனக்கு நண்பன் படத்திலிருந்தே விஜய்யுடன் நல்ல பழக்கம். மேலும் நான் அந்தப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். அப்போதே அவர் என்னிடம்  நல்ல கதை இருந்தால் சொல் பண்ணலாம் என்றார். நான் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு வேலை செய்தேன்.

முழுமையான கதையுடன் விஜய்யை சந்திக்க விரும்பினேன். ராஜா ராணி படத்தின் போதே நான் இரண்டு முறை விஜய்யை சந்தித்து கதை குறித்துப் பேசினேன். அவருக்குப் பிடித்துவிட்டது. மேலும் அடுத்தமுறை அவரை சந்திக்கும் போது முழுமையான ஸ்க்ரிப்டுடன் சந்தித்தேன்.

இந்தப் படம் ஓர் இரவில் முடிவாகவில்லை. பல நாட்கள் கலந்துரையாடிய பிறகே கிடைத்த படம். விஜய் ஒரே ஒரு கண்டீஷன் மட்டும் போட்டார். படம் குடும்பப் படமாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

நானும் மாஸ் விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டதோடு குடும்பங்களுக்கான படமாகவும் உருவாக்கி வருகிறேன். படத்தில் பஞ்ச் டயலாக், மாஸ் சீன்கள் எல்லாம் இருக்கும் அனைத்தும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார் அட்லீ.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions