அட்லி படத்தில் அப்பாவாக நடிக்கும் விஜய்

Bookmark and Share

அட்லி படத்தில் அப்பாவாக நடிக்கும் விஜய்

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கத்தி படத்திற்கு பிறகு இந்த படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ஒரு வேடமாக காக்கி யூனிபார்ம் அணிந்து போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மற்றொரு வேடத்தை ரகசியமாக வைத்திருந்தனர்.தற்போது, மற்றொரு வேடம் என்னவென்பதும் வெளியாகியுள்ளது. 

அதாவது, விஜய் இதில் அப்பா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முதன்முறையாக ஒரு படம் முழுவதும் விஜய் அப்பா வேடமேற்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் நடுவில் தொடங்கவிருக்கின்றனர்.

 


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions