நெல்லையில் விஜய் 60 படப்பிடிப்பு!

Bookmark and Share

நெல்லையில் விஜய் 60 படப்பிடிப்பு!

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்கூட இப்படத்தின் அறிமுக பாடலை படக்குழுவினர் படமாக்கினர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நெல்லையில் நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க திருநெல்வேலியை மையப்படுத்தி உருவாவதால் அங்கு படப்பிடிப்பை நடத்தப்போவதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலியை போன்று சென்னையிலேயே செட் போட்டு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டனர். இருப்பினும், ஒருசில காட்சிகளுக்காக நெல்லையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இப்படக்குழு நெல்லையில் முகாமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘கத்தி’ படத்திற்கு பிறகு காமெடி நடிகர் சதீஷ் இப்படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். மேலும், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment





Related News
பைரவா சட்டை விற்பனைக்கு வந்தது – முழு விவரம் உள்ளே!
பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!
பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து!
இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!
விஜய் 60 படத்திற்காக விஜய் எடுக்கும் புது முயற்சி?
ஜெட் வேகத்தில் உருவாகும் ‘விஜய் 60’!
'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
விஜய்-60வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!
‘விஜய் 60’ படத்தில் மேலும் இணையும் இரண்டு கதாநாயகிகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions