இந்தாண்டும் நோ! - விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!

Bookmark and Share

இந்தாண்டும் நோ! -  விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். விஜய்க்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நடிகர் விஜய் எப்போதும் தனது ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனது ரசிகர்களை சந்தித்து பேசுவார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார். குறிப்பாக தனது பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனைக்கு சென்று அன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பார், அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், பெண்களுக்கு தையல் மிஷின் என ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்வார்.

ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக இத்தகைய விழாக்களை தவிர்த்து வருகிறார் விஜய். அதற்கு ஒரு காரணமும் உண்டு இரு ஆண்டுகளுக்கு முன்னர் தனது பிறந்தநாள் விழாவின் போது விஜய்க்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் தான். அதேசமயம், தான் ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றாலும், விஜய்யின் ரசிகர்கள் வழக்கம் போல அவரது பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தாண்டாவது விஜய், ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவாரா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்தாண்டும் அவர் ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடப்போவது கிடையாது.

விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக விஜய், சில காலம் தனது குடும்பத்துடன் லண்டன் சென்று ஓய்வெடுக்க இருக்கிறார். இன்னும் இருதினங்களில் அவர் லண்டன் கிளம்ப இருக்கிறார்.

தனது பிறந்தநாளை லண்டனில் குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு தான் இந்தியா திரும்ப இருக்கிறார். ஆகையால் இந்தாண்டும் விஜய், தனது ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என்றே தெரிகிறது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions