சென்னை–கடலூரில் வெள்ள நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

சென்னை–கடலூரில் வெள்ள நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்

சென்னையில் பெய்த கனமழையால் சென்னை நகரமே பெரும் சேதம் அடைந்துள்ளது.

பொதுமக்கள் பலரும் அடிப்படை உதவிகூட கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு உதவ பலரும் முன்வந்து பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் ஏற்பாட்டில் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆனந்த், ஈரோடு மாண்டல தலைவர் பாலாஜி, நெல்லை மாவட்ட தலைவர் ஷஜி கடலூர் மாவட்ட தலைவர் சீனு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions