பல கோடி செலவில் விஜய்யின் அறிமுகப் பாடல்

Bookmark and Share

பல கோடி செலவில் விஜய்யின் அறிமுகப் பாடல்

விஜய் நடிக்கும் படம் என்றாலே அவருடைய அறிமுகப் பாடலுக்கு தனி மவுசு உண்டு. வழக்கமாக எல்லாம் அவர் ஒரு படத்தில் 'என்ட்ரி' கொடுத்தால் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு அதிரடியான பாடல் மூலம் அவர் என்ட்ரி கொடுப்பதைத்தான் அவருடைய ரசிகர்களும் விரும்புவார்கள். இது விஜய்யின் பல படங்களில் மாற்ற முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

'புலி' படமும் இதற்கு விதி விலக்கல்ல. சிம்புதேவன் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி அருகே உள்ள தலக்கோணம் காட்டில் நடந்து வருகிறது. இங்குதான் விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இதற்காக சுமார் 5 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் விஜய் ஆடிப்பாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பதால் இந்தப் படத்திற்கான பாடல்களில் தனி கவனம் செலுத்தி இசையமைத்துள்ளாராம்.

இதற்கு முன் அவர் விஜய் நடித்து இசையமைத்த 'சச்சின், வில்லு' படங்களைப் போலவே இந்த 'புலி' படத்தின் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாகும் விதத்தில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions