விஜய்க்கு பாட்டு பாடிய தேவா

Bookmark and Share

விஜய்க்கு பாட்டு பாடிய தேவா

‘புலி’ படத்திற்கு பிறகு விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் விஜய் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

அட்லியின் ‘ராஜா ராணி’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இது இவர் இசையமைக்கும் 50-வது படமாகும். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே, இப்படத்தின் பாடல் பதிவுகளில் ஜி.வி.பிரகாஷ் களமிறங்கிவிட்டார்.

இதற்காக கோவாவில் முகாமிட்டு படத்திற்கான பாடல் பதிவுகளில் ஈடுபட்டார். இந்நிலையில், இப்படத்தின் இசைப் பணிகளை பாதியளவு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவிட்டாராம்.

இதைவிட ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவா ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். இதை ஜி.வி.பிரகாஷே தெரிவித்துள்ளார். இந்த பாடல் லோக்கல் ஸ்டைலில் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, விஜய் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தாலும், இது தனக்கு 50-வது படம் என்பதால் இப்படத்தில் பாடல்களை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கவேண்டும் என கவனமுடன் பணியாற்றி வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions