கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்தது: இயக்குனர் விஜய்

Bookmark and Share

கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்தது: இயக்குனர் விஜய்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா- தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீலிஸ் ஆனது. 3 மொழிகளிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி கூறிய இயக்குனர் விஜய்....“சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜமானது தான். என்றாலும் தொடர் தோல்வி வந்தால் படைப்பாளிகள் சோர்ந்து விடுவார்கள். எனக்கு சமீபகாலமாக சில பிரச்சனைகள் இருந்தன. என்றாலும் ‘தேவி’ படத்துக்காக எனது கவனத்தை சிதறவிடாமல் கடுமையாக உழைத்தேன். அதற்கு பலன் கிடைத்து இருக்கிறது. மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

சென்னையில் மட்டுமல்ல பட்டி தொட்டிகளில் எல்லாம் ‘தேவி’ படம் கலக்கிக் கொண்டிருக்கிறது. இது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது வாழ்க்கையில் வெற்றி அவசியம் தேவைப்பட்ட தருணம் இது. இப்போது அதை ‘தேவி’ படம் எனக்கு கொடுத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவரையும் நான் நன்றியோடு பார்க்கிறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions