தனுஷ் படத்தில் காக்கிச்சட்டை போட்டு அறிமுகமாகும் ‘விஜய்’!

Bookmark and Share

தனுஷ் படத்தில் காக்கிச்சட்டை போட்டு அறிமுகமாகும் ‘விஜய்’!

தனுஷின் மாரி படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார் விஜய். அவர் தான் ஏற்கனவே முன்னணி நடிகராக இருக்கிறாரே என நீங்கள் குழம்ப வேண்டாம். இந்த விஜய் பாடகர் ஜேசுதாஸின் மகன்.

‘காதலில் சொதப்புவது எப்படி', ‘வாயை மூடி பேசவும்' ஆகிய படங்களை இயக்கி பாலாஜி மோகன், தற்போது தனுஷை வைத்து ‘மாரி' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்' நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்தில் தனுஷ் சேரித் தலைவனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட போஸ்டர்களும் அதனை உறுதி செய்வது போல் உள்ளது.

இப்படத்தின் மூலம் பாடகர் ஜேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் ஜேசுதாஸ் நடிகராக அறிமுகம் ஆகிறார். படத்தில் முக்கியமான கதாபாத்திரமாம் விஜய் ஜேசுதாஸுக்கு.

ஏற்கனவே மலையாளப் படம் ஒன்றில் நடித்துள்ள விஜய் ஜேசுதாஸுக்கு, தமிழில் மாரி தான் முதல் படம். விஜய் யேசுதாசும், தனுஷும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜேசுதாஸ் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட விஜய் ஜேசுதாஸ், முதல் படத்திலேயே போலீஸ் யூனிபார்ம் மாட்டுவதால் மகிழ்ச்சியோடு இருக்கிறாராம். ஒரு நாயகன் உதயமாகிறான்...


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தவறு செய்து விஜய்யின் காலில் விழுந்த தனுஷ் நாயகி
அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் விஜய், தனுஷ் படங்களுக்கு சிக்கல்!
விஜய் இடத்தில் தனுஷ் – என்ன எதிர்பார்கலாம்?
விஜய்யுடன் இணைந்த தனுஷ்!
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
விஜய் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன தனுஷ்!
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
அஜித், விஜய் பாணியில் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions