நடிக்க ஆசை இல்லை, இது தான் என்னுடைய கனவு - தளபதி விஜயின் நிறைவேறாத கனவு.!

Bookmark and Share

நடிக்க ஆசை இல்லை, இது தான் என்னுடைய கனவு - தளபதி விஜயின் நிறைவேறாத கனவு.!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் மிக பெரிய புகழ் பெற்ற மெஹா ஹிட் நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களுக்காக மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே காத்து கொண்டிருக்கின்றது.

ஆனால் உண்மையில் தளபதி விஜய்க்கு நடிகனாக வேண்டும் என்பது ஆசை இல்லையாம், தளபதி விஜயின் உண்மையான கனவு என்ன என்பதை பற்றி இயக்குனர் விஜய் மில்டன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் மில்டன் இயக்குனராகி இரண்டாவது படத்திலேயே தளபதி விஜயுடன் பணிபுரிய ப்ரியமுடன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது, அப்போது விஜய் மிகவும் இளமையான வயதுடையவர். விஜய் மில்டனிடம் எனக்கு நடிகனாக வேண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லைங்க அண்ணா.

என்னுடைய ஆசையே வேற, மிக பெரிய இயக்குனராக ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு, 2000-க்கு பிறகு இயக்குனாராகி விடுவேன் என விஜய் கூறினாராம். அப்படி விஜய் இயக்குனராக மாறி இருந்தால் நான் அவரிடம் ஒளிப்பதிவாளராகி இருப்பேன் எனவும் விஜய் மில்டன் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions