விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்

Bookmark and Share

விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்

இளையதளபதி விஜய் இன்று தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.பிரபலங்கள் பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான தாமு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

இவர் பேசுகையில், விஜய் அஜித்தின் நல்ல நண்பர், ஒரு காலத்தில் அவருடைய பில்லா ரிங்டோனைத்தான் தன்னுடைய மொபைலில் வைத்திருந்தார்.விஜய் மேல் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. இவர் தன்னுடைய வாழ்க்கையில் மறைந்த மேதகு அப்துல் கலாம் ஐயாவை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அவரது ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் இணைத்து கல்வியில் ஒரு புரட்சி செய்ய திட்டமிட்டிருந்தோம்.திருவனந்தபுரத்தில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் விஜய் ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டதால் அவரால் அந்த ஜாம்பவானை சந்திக்க முடியவில்லை.

எனக்கு இந்த விஷயம் இப்போதும் வருத்தமாக உள்ளது என்று தாமு தெரிவித்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions