'புலி' படத்தில் பாடிய விஜய்

Bookmark and Share

'புலி' படத்தில் பாடிய விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்துள்ள புலி' படத்தில் விஜய் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது.

தற்போது ரிக்கார்டிங்கின் போது விஜய், இயக்குனர் சிம்புதேவன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் உள்ள பாடல் பதிவு எப்போதோ நடந்து விட்டது என்றுதான் சொல்கிறார்கள்.

ஆனால், அப்போது அந்தப் புகைப்படத்தை வெளியிடவில்லை. படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்துவிட்டது. பாடல் காட்சிகளை கம்போடியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளில் கடைசியாகப் படப்பிடிப்பு நடத்தி முடித்தார்கள்.

படத்திற்கான பின்னணி இசைச் சேர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவற்றின் வேலைகளை முடியும் தருவாயில் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே, 'புலி' படத்தின் பெரும்பாலான ஏரியாக்களின் வியாபாரம் முடிவடைந்துவிட்டது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions