விஜய் சந்தித்த புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் குணமடைந்தனர்

Bookmark and Share

விஜய் சந்தித்த புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் குணமடைந்தனர்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற மூன்று சிறுவர்களை நடிகர் விஜய் சமீபத்தில் சந்தித்தார். அந்த சிறுவர்கள் தற்போது குணமடைந்துள்ளனர். இதுகுறித்து மேக் ஏவிஷ் தொண்டு நிறுவன உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மூன்று சிறுவர்கள் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றனர். அவர்கள் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதால் அவரை சந்திக்க விரும்பினர். இதுபற்றி விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சந்தித்தார்.

சிறுவர்களிடம் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டார். எதிர்கால ஆசைகளை தெரிந்து கொண்டார். அவர்களுடன் புகைப்படமும், எடுத்துக் கொண்டார். மூன்று பேரும் வாழ்க்கையில் சிறக்க விஜய் வாழ்த்தினார். தங்கள் ஆசையை நிறைவேற்றிய விஜய்க்கு சிறுவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மூன்று சிறுவர்களும் தற்போது புற்றுநோயை எதிர்த்து வெற்றி கண்டுள்ளனர். மூவரும் சிறந்த மருத்துவர்களின் சிகிச்சை மூலம் புற்றுநோயை வென்றுள்ளார்கள். முழுமையாக குணமடைந்து இயல்பான வாழ்க்கை முறையை தங்கள் பெற்றோருடன் கழித்து வருகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions