
விஜய்க்கு மக்கள் மனதில் இடம் நிச்சயம் உண்டு என்பது தற்போது நடக்கும் சம்பவங்கள் தெளிவாக காட்டுகிறது. அவரின் படங்கள் பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். அதில் முக்கியமான ஒரு படம் ஃப்ரண்ட்ஸ். விஜய் ரசிகர்கள் இன்னும் இப்படத்தை கொண்டாடுவார்கள். விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, சார்லி என பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தை சித்திக் இயக்கியிருந்தார். இதில் சார்லிக்கும், சித்திக்கும் நீண்ட நாள் நட்பாம். மலையாளத்தில் இப்படம் வந்தாலும் அதில் சார்லி கேரக்டர் இல்லையாம். முன்பே இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டாலும் சார்லிக்காகவே தனியாக காட்சிகளை உருவாக்கி சேர்த்தார்களாம்.
இப்படத்தை பற்றி அண்மையில் நடிகர் சார்லி பத்திரிக்கையில் மனம் திறந்துள்ளார். தனக்கு கிடைத்த படங்களில் மிக முக்கியான ஒன்றாக கூறினார். ஒரு நேரத்தில் இவரை வளர்ச்சியை முடக்க சதிகள் நடந்ததாம்.
ஆனால் இதுபோன்ற படங்கள் அவரின் மதிப்பு மேலும் கூட்டி சினிமா பயணத்தை இன்னும் சீராக்கியிருக்கிறது. ஒருவேளை இது இல்லாமல் போயிருந்தால் என்னாவாகியிருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.
Post your comment
Related News | |
![]() |