கில்லிக்கு பிறகு தெறி பாடல்கள் தான் பட்டி தொட்டியெங்கும் கலக்கும்: ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை

Bookmark and Share

கில்லிக்கு பிறகு தெறி பாடல்கள் தான் பட்டி தொட்டியெங்கும் கலக்கும்: ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 

‘தெறி’ ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படம் என்பதால் இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் கடும் சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் பாடல்கள் குறித்து கூறும்போது, விஜய் நடித்த ‘கில்லி’ படத்திற்கு பிறகு ‘தெறி’ படத்தின் பாடல்கள்தான் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகப் போகிறது. 

குறிப்பாக, ரோகேஷ் எழுதியுள்ள ‘ஜித்து ஜில்லாடி’ என்ற பாடல் விஜய்யின் அறிமுக பாடல்களிலேயே முதன்மையானதாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை மீனாவின் மகள் நானிகா இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடித்துள்ளார்.

மேலும், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions