விஜய்க்கு வேற வேலையே இல்லையா…கலாய்த்து கதிகலங்க வைத்த கவுண்டமணி

Bookmark and Share

விஜய்க்கு வேற வேலையே இல்லையா…கலாய்த்து கதிகலங்க வைத்த கவுண்டமணி

சமீபத்தில் நடந்த 49 ஓ பட இசைவெளியீடு விழாவில் கவுண்டமணி தனக்கே உரிய காமெடி பாணியில் பேசி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளார்.

அப்போது கவுண்டமணியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், விஜய் உங்க படத்தின் ரிலீஷ்கு உதவினராமே என்று கேட்க உடனே கவுண்டமணி ” ஏன்… என் படத்தை ரிலீஸ் பண்ணலேன்னா அவருக்கு தூக்கம் வராதாமா? விஜய்க்கு வேற வேலை இல்லையா… அவரு பாட்டுக்கு தன்னோட படத்தில் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருக்கிறாரு.

என் படத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவரு என் படத்துக்கு உதவி பண்ணணும்? சொல்லு சொல்லு…” என்று பத்திரிகையாளர்களை உலுக்க… அதற்குள் விழா துவங்கி அவரை மேடைக்கு அழைத்துவிட்டார்களாம்.

அவ்விழாவிற்கு சிவகார்த்திகேயன் வர தாமதமானதும் கவுண்டமணி, அவரு இப்போ எங்க இருக்காராம், வர வழியில் வேற எங்கயாவது கூப்பிட்டாங்க போய்ட போறாரு என்று சொல்லியிருக்கிறார். பிறகு சிறிது நேரத்திலேயே சிவா விழாவிற்கு வந்துவிட்டாராம்.

அவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

உலகத்திலேயே எந்த நாற்காலியிலயும் பயமில்லாம உட்கார்ந்துடலாம். ஆனால் கவுண்டமணி சாருக்கு பக்கத்து நாற்காலியில் அமர்வது ஆபத்தான விசயம்.

இப்போ மேடையில் பேசிட்டு போன அத்தனை பேரையும் கலாய்த்து கதிகலங்க வச்சுட்டாரு. அவர் கலாய்க்காத ஒரே ஒருத்தர் தேனிசை செல்லப்பாதான் என்று பயந்த தோனியில் பேசினாராம்.

மேலும் நான் கவுண்டரை பார்க்கப் போனப்போ, அவர் வைத்திருந்த ரிங் டோர்ன் மியூசிக் கேட்டு ஷாக் ஆயிட்டேன். பர்ஸ்ட் அண் பியூரியஸ் படத்தில் வரும் பாடலைத் தான் ரிங் டோனா வைத்திருக்கிறார். கேட்டால், ‘நான் தமிழ் படமெல்லாம் பார்க்கறதில்லப்பா’ன்னு அசால்லட்டா சொன்னாரு. இங்கிலீஷ் படங்கள் தான் பாப்பாராம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions