ஜி.வி.பிரகாஷின் பென்சில் டீசரை வெளியிடும் விஜய்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் பென்சில் டீசரை வெளியிடும் விஜய்

இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘பென்சில்’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். மணி நாகராஜ் இயக்கியிருக்கிறார்.

பள்ளியில் நடக்கிற காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் காட்சிகளை ஜப்பான் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கியுள்ளனர். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை கோலிவுட்டின் பிரபலமான இரண்டு நபர்களை வைத்து வெளியிட திட்டமிட்டனர். அதன்படி படத்தின் டீசரை விஜய் வெளியிடவுள்ளார் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். மற்றொரு நபர் யார் என்று சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

பென்சில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions