விஜய், நயன்தாரா வீட்டில் 2–வது நாளாக ரெய்டு

Bookmark and Share

விஜய், நயன்தாரா வீட்டில் 2–வது நாளாக ரெய்டு

நடிகர் விஜய் வீட்டில் இன்று 2–வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நடந்தது.

தொடர்ந்து 2–வது நாளாக நீலாங்கரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது வீட்டு கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.

வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியில் உள்ளவர்கள் வீட்டுக்குள் வரவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையின் போது விஜய் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல நடிகை நயன்தாராவின் வீடுகளில் இன்று 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. கொச்சி வீட்டில் சோதனை நடந்தது. இதேபோல பைனான்சியர் அன்பு செழியன் வீட்டிலும் 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions