கம்போடியாவில் விஜய் - ஹன்சிகா

Bookmark and Share

கம்போடியாவில் விஜய் - ஹன்சிகா

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டதை எட்டி வருகிறது. சென்னை, கேரளா, தலக்கோணம் ஆகிய ஊர்களில் புலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது இப்படத்திற்கான பாடல் காட்சி கம்போடியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் உடன் ஹன்சிகா மோத்வானி பங்குபெறும் பாடல்காட்சிகள் மட்டும் அங்கே படமாக்கப்படுகிறது.

அதற்காக, இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், மற்றும் 40 நடன கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் கடந்த வாரம் கம்போடியா நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு விஜய், ஹன்சிகாவுடன் 40 நடனக் கலைஞர்களும் பங்கேற்கும் பாடல்காட்சியின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. கம்போடியாவில் வேறு பல படங்களும் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன.

எனவே இதுவரை யாரும் படமாக்காத லொகேஷன்களில் இப்போது பாடலை படமாக்கி வருகிறார்கள்.  அங்கு தொடர்ந்து 12 நாட்கள்  படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.  

இதனை தொடர்ந்து சென்னை திரும்பவுள்ளனர் 'புலி' டீம்!  'புலி'யின் படப்பிடிப்பை முடித்த பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுக்க செல்ல இருக்கிறார் விஜய்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions