இது என்ன மாயம், இரண்டு காலகட்ட கதை: விஜய்

Bookmark and Share

இது என்ன மாயம், இரண்டு காலகட்ட கதை: விஜய்

விக்ரம்பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் இது என்ன மாயம். இவர்களுடன் நவ்தீப், நாசர், அம்பிகா, சார்லி, உள்பட பலர் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

சரத்குமார், ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கிறார்கள். "எல்லா மனிதர்களுக்குமே காதல் பூக்கும் தருணம் அற்புதமானது எந்த காலத்திலும் காதல் பூத்த தருணத்தையும், முதல் காதலையும் யாராலும் மறக்க முடியாது. கல்லூரியில் படிக்கும் விக்ரம் பிரபுவுக்கு அப்படி ஒரு காதல் பூக்கிறது.

அது கீர்த்தி சுரேஷ் மேல். படித்து முடித்து விட்டு கல்லூரி காம்பவுண்டை விட்டு வெளியே வந்ததும் காதல் பிரிந்து செல்கிறது. எல்லாவற்றையும் மறந்து விடுகிற விக்ரமால் காதலை மட்டும் மறக்க முடியவில்லை.

வேறு வாழ்க்கை வேறு சூழல் என இன்னொரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது மீண்டும் முன்னால் வந்து நிற்கிறது முதல் காதல். கல்லூரி காம்பவுண்டுக்குள் சிறகடித்து பறந்த காதல் நிகழ்கால வாழ்க்கையில் எப்படி அதனை எதிர்கொள்கிறது என்கிற கதை.

விக்ரம் பிரவுவின் இன்னொரு பரிமாணத்தை காட்டும். கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நான், ஜி.வி.பிரகாஷ், நீரவ்ஷா கூட்டணி சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் இருக்கும்.

இதில் இருக்கிறது லவ் மேஜிக். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கொஞ்ச நாளாவது தன் முதல் காதலை அசைபோட வைக்கும்" என்கிறார் இயக்குனர் விஜய்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions