விஜய் பிறந்தநாளில் ரத்ததானம் செய்த ரசிகர்கள்

Bookmark and Share

விஜய் பிறந்தநாளில் ரத்ததானம் செய்த ரசிகர்கள்

நடிகர் விஜய் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். ரத்ததானம் செய்தனர்.

தென் சென்னை கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருவான்மியூர் கே.வி. தாமு. தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது. தையல் மிஷின், இலவச அரிசி, மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

வட சென்னை பகுதியில் கட்பீஸ் பழனி தலைமையில் தையல் எந்திரம், லேப்டாப், மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டன. ஏழை பெண்களுக்கு புடவைகளும், வழங்கப்பட்டது.

தென் சென்னை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அப்புனு தலைமையில் வடபழனி கோவிலில் சிறப்பு பூஜையும் கோடம்பாக்கத்தில் அன்னதான நிகழ்ச்சியும் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் விஜய் மக்கள் இயக்க தலைவர் என். ஆனந்த், நிர்வாகிகள் ரவி ராஜா, ராஜேந்திரன், ஏ.சி.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வடபழனி முருகன் கோவிலில் ரவிராஜா தலைமையில் 200 பெண்களுக்கு புடவைகளும் 10 பேருக்கு தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

நீலாங்கரையில் காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், வேட்டி, சேலை வழங்குதல், கோவில்களில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன.

திருவள்ளூர் மாவட்டம் சார்பில் அம்பத்தூர் பாலமுருகன் தலைமையில் ஏழை பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. இதில் விஜய் மக்கள் இயக்க தலைவர் என்.ஆனந்த் கலந்து கொண்டார். புதுச்சேரியில் எஸ்.சி. ஆனந்த் ஏற்பாட்டில் கோவில்களில் சிறப்பு பூஜை ஏழை மாணவிக்கு கல்வி உதவி, அன்னதானம், ரத்ததானம் நடந்தன.

இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions