விஜய் மகளுக்கு குரல் கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி

Bookmark and Share

விஜய் மகளுக்கு குரல் கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் இறுதிகட்ட பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றொரு புறம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ஏற்கனவே விஜய் ஒரு பாடலை பாடி முடித்துவிட்ட நிலையில் இன்னொரு பாடலை அவர் விரைவில் பாடவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கும் மீனாவின் மகளுக்கும் ஒரு பாடல் இருப்பதாகவும், அந்த பாடலை சமீபத்தில் ரிலீஸான 'சைவம்' படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்ற உன்னிகிருஷ்ணன் மகள் உத்தாரா பாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

'சைவம்' படத்தில் தேசிய விருது பெற்றது போலவே இந்த படத்தின் பாடலுக்காகவும் உத்தாரா தேசிய விருது பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions