விஜய்60 பட இயக்குனர் குறித்து திடீர் ட்விஸ்ட் வைத்த விஜய்

Bookmark and Share

விஜய்60 பட இயக்குனர் குறித்து திடீர் ட்விஸ்ட் வைத்த விஜய்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா, எமிஜாக்சன் மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் அல்லது ஜனவரியில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் அடுத்த படத்தை உறுதி செய்து விடுவது விஜய்யின் வழக்கம். ஆனால் இம்முறை இவரின் அடுத்த படம் குறித்த தகவல் சற்று குழப்பத்தில் உள்ளது. இதுநாள் வரை விஜய்யின் அடுத்த படம் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் தான் எனக்கூறி வந்தனர்.

ஆனால் தற்போது இயக்குனர் மோகன் ராஜா மற்றும் விஜய் சந்திப்பால் இதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ‘விஜய் 60′ படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கின்றார் என்பது மட்டுமே உறுதியாகியுள்ளதாம்.

இப்படத்தை இயக்குவது ஜெயம் ராஜா? அல்லது எஸ்.ஜே.சூர்யா? என்ற உறுதியான தகவல்கள் தீபாவளிக்கு பின்னர் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions