விஜய்யின் மனசு யாருக்கு வரும்...விஜய்யை பார்த்து வியந்த பெண்

Bookmark and Share

விஜய்யின் மனசு யாருக்கு வரும்...விஜய்யை பார்த்து வியந்த பெண்

புலி படத்தை அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் காக்கி படத்தில் நடித்து வருகிறார். அவர் என்ன தான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நேரம் ஒதுக்க தவறுவது இல்லை. இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் அவரை சந்தித்த தருணத்தை, அனுபவத்தை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலில் நான் விஜய் ரசிகை இல்லை, ஆனால் எனது கணவர் விஜய்யின் தீவிர ரசிகர். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்பதற்காக விஜய்யை சந்திக்க எனது நண்பர் ஏற்பாடு செய்தார். நாங்கள் முதலில் அவர் இருக்கும் பிஸியில் கிடைக்காது என்று நினைத்தோம். ஆனால் 'வர சொல்லுங்கள்' என்று அவரிடமிருந்து தகவல் வர எங்க எல்லாருக்கும் ஆச்சரியம்.

உடனே எனது நண்பர், எனது கணவர் மற்றும் குழந்தையுடன் விஜய்யை பார்க்க சென்றோம். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒருவர், சிறிது கூட கர்வமின்றி எங்களை இன்முகத்துடன் வரவேற்று எங்களுடன் அன்பாக பேசினார். மேலும் எனது மகனை கையில் தூக்கி அவனுடன் விளையாடினார். அப்போது தான் எனக்கு புரிந்தது விஜய்க்கு ஏன் இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது.

விஜய் ஒரு அபாரமான பெர்சனாலிட்டி உள்ளவர் என்பதும் மனித நேயமுள்ள ஒரு மனிதர் என்பதும் எங்களுக்கு அன்றைய தினம் புரிய வந்தது. விஜய்யுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த எனது நண்பருக்கு மிகப்பெரிய நன்றி' என்று சமூக வலைத்தளத்தில் தனது சந்தோஷத்தை பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions