ஜெகபதி பாபுவுடன் மோதும் விஜய்@

Bookmark and Share

ஜெகபதி பாபுவுடன் மோதும் விஜய்@

விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும், ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சதீஷும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஸ்ரீமன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் தான் படத்தின் பிரதான வில்லனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை வரை நடைபெறவிருக்கிறது.

அதன்பிறகு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லையில் ஜுன் 3-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்யும், ஜெகபதி பாபுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்த படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions